*Do Not be Troubled*
*1. Beginning of Sorrows*
மத்தேயு (Matthew) 24:6-8 - யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; *கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்*; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், *முடிவு உடனே வராது*.
7. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
8. *இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்*.
*2. Endure till the End*
மத்தேயு (Matthew) 24:12-13 - அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய *அன்பு தணிந்துபோம்*.
13. *முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்*.
மத்தேயு (Matthew) 24:45-46 - ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த *உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்?*
46. எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே *பாக்கியவான்*.
*3. Powers in heaven shall be shaken*
மாற்கு (Mark) 13:25-26 - வானத்தின் நட்சத்திரங்கள் விழும், *வானங்களிலுள்ள சத்துவங்களும் அசைக்கப்படும்*.
26. *அப்பொழுது* மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.
எபிரெயர் (Hebrews) 12:26-29 - அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணிற்று; *இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன்* என்று இப்பொழுது வாக்குத்தத்தஞ்செய்திருக்கிறார்.
27. இன்னும் ஒருதரம் என்கிற சொல்லானது *அசையாதவைகள் நிலைத்திருக்கத்தக்கதாக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல் மாறிப்போம்* என்பதைக் குறிக்கிறது.
28. ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
29. *நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே*.
ஆகாய் (Haggai) 2:21-22 - நீ யூதாவின் தலைவனாகிய செருபாபேலோடே சொல்லவேண்டியது என்னவென்றால், *நான் வானத்தையும் பூமியையும் அசையப்பண்ணி*,
22. *ராஜ்யங்களின் சிங்காசனத்தைக் கவிழ்த்து, ஜாதிகளுடைய ராஜ்யங்களின் பெலத்தை அழித்து, இரதத்தையும் அதில் ஏறியிருக்கிறவர்களையும் கவிழ்த்துப்போடுவேன்*; குதிரைகளோடே அவைகளின்மேல் ஏறியிருப்பவர்களும் அவரவர் தங்கள் தங்கள் சகோதரனின் பட்டயத்தினாலே விழுவார்கள்.
*4. Redemtion is Near*
லூக்கா (Luke) 21:25-28 - சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; *பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்*.
26. வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் *பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்*.
27. *அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்*.
28. *இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்* என்றார்.
*5. Redeem the Time*
கொலோசெயர் (Colossians) 4:5 - புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, *காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்*.
எபேசியர் (Ephesians) 5:15-17 - ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து,
16. *நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்*.
17. ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.
*6. Do Not be Troubled*
மத்தேயு (Matthew) 8:24-26 - 24. அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று; அவரோ நித்திரையாயிருந்தார்.
25. அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து, அவரை எழுப்பி: *ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம்* என்றார்கள்.
26. அதற்கு அவர்: *அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள்* என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதலுண்டாயிற்று.
மத்தேயு (Matthew) 10:28 - ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், *சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்*; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
லூக்கா (Luke) 12:7 - *உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது*, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
ஏசாயா (Isaiah) 8:12-13 - 12. இந்த ஜனங்கள் கட்டுப்பாடு என்று சொல்லுகிறதையெல்லாம் நீங்கள் கட்டுப்பாடு என்று சொல்லாமலும், *அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நீங்கள் பயப்படாமலும், கலங்காமலும்*,
13. சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள்; *அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக*.
சங்கீதம் (Psalm) 91:5-7 - 5. *இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும்*,
6. இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.
7. *உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது*.
வெளி (Revelation) 3:10 - என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் *பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்*.
2 பேதுரு (Peter) 2:9 - *கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும்*, அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.
சங்கீதம் (Psalm) 112:1 - அல்லேலூயா, *கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்*.
சங்கீதம் (Psalm) 112:7 - *துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்*.
நீதிமொழிகள் (Proverbs) 3:25-26 - 25. *சடிதியான திகிலும், துஷ்டர்களின் பாழ்க்கடிப்பும் வரும்போது நீ அஞ்சவேண்டாம்*.
26. கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.
ஆபகூக் (Habakkuk) 3:17-18 - 17. அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்,
18. *நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்*.
சங்கீதம் (Psalm) 46:1-3 - 1. தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.
2. ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும்,
3. *அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம்*.
யோவான் (John) 14:27 - சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. *உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக*.
2 தீமோத்தேயு (Timothy) 1:7 - தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், *பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்*.
1 யோவான் (John) 4:18 - *அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல*.
*7. Watch = Pray*
மாற்கு (Mark) 13:35-37 - அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான் சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள்.
36. நீங்கள் நினையாத வேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள்.
37. *நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள்* என்றார்.
மாற்கு (Mark) 13:33 - அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், *விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்*.
லூக்கா (Luke) 21:34-36 - உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், *நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்*.
35. *பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும்*.
36. ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, *எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்*.
கொலோசெயர் (Colossians) 4:2 - *இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்*, ஸ்தோத்திரத்துடன் *ஜெபத்தில் விழித்திருங்கள்*.
எபேசியர் (Ephesians) 6:18 - எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் *சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்*.
1 பேதுரு (Peter) 4:7 - எல்லாவற்றிற்கும் *முடிவு சமீபமாயிற்று*; ஆகையால் *தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து (Watch), ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்*.
வெளி (Revelation) 3:3 - ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. *நீ விழித்திராவிட்டால்*, திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்.
2 பேதுரு (Peter) 3:14 - ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் *கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே* அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.
கலாத்தியர் (Galatians) 6:9 - *நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக*; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.
*8. We know the Prohecies*
மாற்கு (Mark) 13:23 - *நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்*.
யோவான் (John) 14:29 - *இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக*, நடப்பதற்குமுன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன்.
2 பேதுரு (Peter) 3:17 - ஆதலால் பிரியமானவர்களே, *இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து*,
18. *நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்*. அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.
2 பேதுரு (Peter) 1:5-10 - 5. இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் *விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும்*,
6. *ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும்*,
7. *தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும்* கூட்டி வழங்குங்கள்.
8. *இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால்*, உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது.
9. இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான்.
10. ஆகையால், *சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை*.
No comments:
Post a Comment