----------------------------------------------------
பிரசங்க குறிப்புகள் - Tamil sermons outlines - Tamil Christian message points
அநேகருக்கு தங்கள் பார்வையில் அவர்கள் ஏதோ மிகவும் பெரியவர்கள் என்ற நினைவு உள்ளது. இது மிகவும் மதியீனமான காரியமாகும். தங்களை அவர்கள் உயர்வாக எண்ணிக் கொள்ளுகின்றனர். தங்களையும் தங்களுக்குரிய காரியங்களையும் பெரிதாக பேசிக் கொள்ளுகின்னனர்.
பண்டைய ஈசாப்பு கதைகளில் ஒரு எருதையும், ஒரு ஈயையும் குறித்த ஒர கதை உண்டு. ஒரு ஈ ஒரு எருதின் கொம்பிலே நெடுநேரம் உட்கார்ந்திருந்தது. அந்த கொம்பில் இருந்து ஈ பறந்து செல்ல ஆயத்தமான போது அந்த எருதைப் பார்த்து பேசிற்றாம், "எருதே நான் பறந்து செல்லப் போகிறேன். அதையிட்டு உனக்கு எந்த துக்கமும் இல்லைதானே ? என்றதாம். எருது ஈயைப் பார்த்து சிரித்துக் கொண்டே தனது கண்களை மேலே உயர்த்தி " ஓ சிறிய அற்பமான ஈயே நீ இருந்தால் என்ன அல்லது போனால் என்ன, இரண்டும் எனக்கு ஒன்றுதான். நீ எனது கொம்பில் வந்து உட்கார்ந்ததே எனக்கு தெரியாதே. அப்படியிருக்க நான் போகட்டுமா ? என்கிறாயே என்றதாம்.
மேற்கண்ட ஈயின் கதையைப் போலத்தான் அநேகருடைய எண்ணமும் உள்ளது. உலகம் என்ற எருதின் கொம்பில் அமர்ந்திருக்கும் அவர்கள் தங்களை குறித்து வீண் பெருமை கொண்டு தங்களை சுற்றியுள்ள உலகம் அவர்களை தங்கள் தலைக்குமேல் தூக்கி வைத்துதிரிக்கின்றது, தங்களுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கின்றது என்று மாயையான மனக்கோட்டை கட்டிகொண்டிருக்கின்றார்கள்.
📖தேவன் நம்மை குறித்து சொல்லும் வார்த்தைகளை கவனித்தீர்களா. நாம் மண் என்கிறார் (சங் 103-14)
தாவீது ராஜா இஸ்ரவேலின் அரசனாக இருந்த போதிலும் தனது பகைஞனாகிய சவுலுக்கு முன்பாக தன்னை "இஸ்ரவேலின் ராஜா ஒரு தெள்ளுப்பூச்சியை தேடி வந்தாரோ ?📖(1 சாமு 26-20) தெள்ளுப்பூச்சிக்கு தன்னை ஒப்பிடும் தாவீது ராஜாவின் மனத்தாழ்மையை பாருங்கள்
தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் 📖(ஆதி 18-27) ஆண்டவரோடு முகமுகமாய் பேசும் கிருபை பெற்ற நம் விசுவாசிகளின் தகப்பன் ஆபிரகாம் தன்னை தன் ஆண்டவருக்கு முன்பாக தாழ்த்தும் விதம் கண்டீர்களா ?
"இதோ நான் நீசன்" 📖(யோபு 40-4) என்று தன் உயிரோடிருக்கும் மீட்பருக்கு முன்பாக கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்த யோபு பக்தன் தன்னை தாழ்த்துகிறார்
கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார், 📖சங்கீதம் 138 :6
×××××××××××××××××××
No comments:
Post a Comment