🔴எது பிரயோஜனம் போதிக்கும் கர்த்தர்📖📖📖📖📖📖📖
🔻ஏசாயா 48:17🔻
⚫இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.
*1.தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது*
========================
*1 தீமோத்தேயு 4:8*
சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது. தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.
*2.நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாய்யிருப்பதே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள்*
========================
*தீத்து 3:8*
இந்த வார்த்தை உண்மையுள்ளது. தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்.இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள்.
*3. அவருடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஐனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்*
========================
*எபிரேயர் 12:10*
அவர்கள் தங்களுக்கு நலமென்றுதோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள். இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஐனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.
========================
No comments:
Post a Comment