In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Sunday, September 17, 2023

தந்தேன் என்னை இயேசுவே | Sunday Sermon notes Tamil | Sunday message tamil

 தந்தேன் என்னை இயேசுவே

 

உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக. - (சங்கீதம் 143:10).

 

 லண்டன் மிஷனெரி சங்கத்தை சேர்ந்த ஆங்கிலேய மிஷனெரி ஒருவர் கொடைக்கானலில் தங்கியிருந்து ஊழியம் செய்து வந்தார். இவர் ஒரு முறை பிரயாணமாக தன் குதிரையில் வத்தலகுண்டு வந்திருந்தார். தன் வேலைகளை முடித்துவிடடு திரும்புமுன் வத்தலக்குண்டில் ஒரு உணவகத்தில் சாப்பிட்டப்பின்னர், இலையை போட்டுவிட்டு கையைக் கழுவும்படி சென்றார்.

 

 

 அப்பொழுது அவர் சாப்பிட்டு விட்டு போட்ட இலையில் மீதியிருக்கும் உணவு துணிக்கைகளை ஒரு பையன் எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இதைக் கண்ட மிஷனெரி உடனடியாக அப்பையனுடைய இரண்டு கைகளையும் தடுத்து அந்த உணவகத்தில் சாப்பாடு வாங்கிக் கொடுத்தார்.

 

 

 பின்பு அந்தப்பையனைப் பார்த்து, 'தம்பி உன் வீடு எங்குள்ளது? உன் பெற்றோர் என்ன செய்கிறார்கள்?' எனக் கேட்டார். 'எனக்கு யாருமே இல்லை ஐயா, வீடும் எனக்கு கிடையாது' என அப்பையன் கூறினான். அதைக் கேட்ட மிஷனெரி 'என்னுடன் வருகிறாயா? என்னுடன் தங்கியிருக்க உனக்கு விருப்பமா?' எனக் கேட்டவுடன் அப்பையனும் அதற்கு இசைந்து அவருடன் சென்று கொடைக்கானலில் தங்கினான்.

 

 

 சில வருடங்கள் கடந்தோடின. அந்த சிறுபையன் வாலிபனாகி வி;ட்டான். அதன் மத்தியில் அந்த மிஷனெரிக்கு பணியிட மாறுதலாக திரும்ப லண்டன் வரும்படி அழைப்பு வந்தது. லண்டன் கிளம்ப ஆயத்தமான மிஷனெரி தான் பராமரித்து வந்த அந்த வாலிபனிடம், 'தம்பி நான் நீண்ட தூரம் பயணம் போகிறேன். இனிமேல் நீயும் நானும் சந்திப்போம் என்பது மிகவும் அரிது. நான் போனபின்பு நீ என்ன செய்யப் போகிறாய்? உன் எதிர்காலத்திட்டம் என்ன?' எனக் கேட்டார். கண்களில் கண்ணீர் துளிகள் நிரம்ப அவ்வாலிபன் தன் சட்டைப்பையில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்துத் தான் எழுதிய பின்வரும் பாடலை பாடினாராம்,

 

 

 தந்தேன் என்னை இயேசுவே

 

 இந்த நேரமே உமக்கே

 

 

 இப்பாடலை பாடி பின்பு மிஷனெரியைப் பார்த்து 'என்னை மீட்டு எனக்கு புது வாழ்வைக் கொடுத்த இயேசுவுக்கே என் எதிர்காலம்' எனக் கூறினாராம்.

 

 

 பிரியமானவர்களே, நாம் இந்த வருடத்தின் முடிவிற்கு வந்து விட்டோம். இந்த வருடம் முழுவதும் நம்மை நடத்தி வந்த வழிகளை நினைத்துப் பார்த்தால் கண்ணீரோடு கர்த்தருக்கு நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம். நம் தேவைகளை அதிசயமாய் சந்தித்தாரே! நம் கண்ணீரை துடைத்தாரே! வியாதியில் நம் வியாதிப்படுக்கையை மாற்றிப் போட்டாரே! ஒவ்வொரு நாளும் நம்மை அதிசயங்ளை காணச் செய்த தேவன் அல்லவா?

 

 

 நமக்கு இன்னும் எத்தனையோ நன்மைகளை செய்த தேவனுக்கு நாம் என்ன சொல்லி துதிக்கப் போகிறோம்? ஒன்றுமில்லாமையிலிருந்து அந்த சிறுவனை ஒரு மகனைப் போல தத்தெடுத்து அந்த மிஷனெரி வளர்த்து ஆளாக்கியதுப் போல ஒன்றுமில்லாமையிலிருந்து நமக்கு தேவன் கொடுத்த ஆசீர்வாதங்கள்தான் எத்தனை எத்தனை! அவருக்கு நன்றி செலுத்த வேண்டாமா? நாம் இந்நாளில் இந்த நல்ல நிலைமையில் இருக்கிறோம் என்றால், நாம் தேவனை, கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காகவல்லவா!

 

 

 அந்த வாலிபனைப் போல நம்மையே கர்த்தருக்கு அர்ப்பணிப்போமா? தந்தேன் என்னை இயேசுவே என்று அவரிடம் நம்மையே கொடுப்போமா? அவருக்காக வாழ்வோமா? அப்படி நம்மையே அவருக்கு கொடுக்கும்போது அவர் நம்மை இன்னும் அதிகமாக ஆசீர்வதிப்பார். ஆமென் அல்லேலூயா!

 #tamilsermonoutlines 

No comments:

Post a Comment

Post Top Ad