*ஜாதி*
*சங்கீதம் 86:9*
ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள்.
*1.தேவனை சமீபமாய்ப் பெற்றிருக்கிற பெரிய ஜாதி*
=======================
*உபாகமம் 4:7,8*
நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம் அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?
8. இந்நாளில் நான் உங்களுக்கு விதிக்கிற இந்த நியாப்பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதியும் எது?
*2.மீட்க்கப்பட்ட ஜாதி*
========================
*2 சாமுவேல் 7:23,24*
உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு நிகரான ஜனமும் உண்டோ? பூலோகத்து ஜாதிகளில் இந்த ஒரே ஜாதியைத் தேவன் தமக்கு ஜனமாக மீட்கிறதற்கும், தமக்குக் கீர்த்தி விளங்கப்பண்ணுகிறதற்கும் ஏற்பட்டாரே. தேவரீர் எகிப்திலிருந்து மீட்டுக்கொண்டுவந்த உம்முடைய ஜனத்துக்கு முன்பாகப் பயங்கரமான பெரிய காரியங்களை நடத்தி, உம்முடைய தேசத்திற்கும், அதிலிருக்கிற ஜாதிகளுக்கும், அவர்கள் தேவர்களுக்கும் உமது மகிமையை விளங்கச் செய்து,
24, உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலர் என்றைக்கும் உம்முடைய ஜனமாயிருப்பதற்கு, அவர்களைத் திடப்படுத்தி, கர்த்ராகிய நீர் தாமே அவர்களுக்குத் தேவனானீர்.
*3. கர்த்தரைத் தெய்வமாகக் கொண்ட ஜாதி*
=========================
*சங்கீதம் 33:12*
கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.
*4. வசனங்களையும், நியாயங்களையும் பெற்ற ஜாதி*
========================
*சங்கீதம் 147:19,20*
யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.
20. அவர் வேறே எந்த ஜாதிக்கும் இப்படிச் செய்ததில்லை, அவருடைய நியாயங்களை அறியாமற்போகிறார்கள். அல்லேலூயா.
*5.சத்தியத்தைக் கைக்கொண்டுவருகிற நீதியுள்ள ஜாதி*
========================
*ஏசாயா 26:2*
சத்தியத்தைக் கைக்கொண்டுவருகிற நீதியுள்ள ஜாதி உள்ளே பிரவேசிப்பதற்காக வாசல்களைத் திறவுங்கள்.
*6. பலத்த ஜாதி*
========================
*ஏசாயா 60:22*
சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.
*7. பரிசுத்த ஜாதி*
=======================
*1 பேதுரு 2:9*
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை ஆறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான அசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஐனமாயும் இருக்கிறீர்கள்.
=======================
No comments:
Post a Comment