Tamil Palamozhi related stoty 👈Click the link
1. பழமொழி (பேச்சு வழக்கு) :
ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்
உண்மையான பழமொழி:
ஆயிரம் வேரை கொன்டவன் அரை வைத்தியன் ஆவான்.
பொருள்:
நோயை போக்க ஆயிரம் வேரை கொண்டு மருந்து கொடுப்பவன் அரை வைத்தியன் ஆவான்.
2.கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
உண்மையான பழமொழி:
கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை
பொருள்:
கழு என்ற ஒரு கோரைப்புல் வகை உண்டு. அந்த வகை கோரைப்புல்லை கொண்டு பாய் பின்னும் போது கற்பூர வாசனையை உணர முடியும். அந்த பாயின் அருகில் தேள், பூரான் உள்ளிட்ட விஷபூச்சிகள் நெருங்காது. மேலும் கழு கோரப் புல்லை கொண்டு பின்னப்பட்ட பாய்களில் படுத்து உறங்கினால் இயற்கையாகவே அதனுடைய மணமான கற்பூர வாசத்தினை நமது நாசிகள் உணரும். அதன் மருத்துவ குணங்கள் நமது உடல் நலனை காக்கும்.
3.மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
உண்மையான பழமொழி:
மண் குதிர் ஐ நம்பி ஆற்றில் இறங்கலாமா?
பொருள்:
மண் குதிர் என்பது ஆற்றில் உள்ள மண். அதை நம்பி ஆற்றில் இறங்கினால் அந்த மண் கறந்து போவதோடு நாமும் மூழ்கி விடுவோம்.
4.உப்பில்லா பண்டம் குப்பையிலே
உண்மையான பழமொழி:
உப்பு உள்ள பாண்டம் குப்பைக்கே
பொருள்:
பாண்டம் பண்டம் அகா கூற படுகிறது. பாண்டம் என்றால் மண்பானை. மண்பானையில் உப்பை வைத்தால், அந்த பானை சிதலம் அடைந்து விடும். அப்படி இருக்கும் பானை உபயோகம் இல்லாமல் குப்பைக்கே பொய் சேரும்.
5.புத்தியுள்ளவனுக்கு புழக்கடையில் மருந்து
உண்மையான பழமொழி:
புத்தியுள்ளவனுக்கு புழக்கடையில் மருந்து
பொருள்:
புழக்கடை என்பதை வீட்டு தோட்டம் என்றும் பொருள் கூறலாம். புத்தியுள்ளவன் அவன் வீட்டில் விளைய கூடிய காய் கணிகளையே உண்டு, தனக்கு வரும் நோய்வாய்களை தீர்த்துக் கொள்வான்.
6.கொன்றால் பாவம் தின்றால் போச்சு
உண்மையான பழமொழி:
கொன்றால் பாவம் தின்றால் போச்சு
பொருள்:
கொன்றவனுடைய பாவம் தின்றவனுக்கும் பொய் சேரும். எவன் ஒருத்தன் யாரை கொன்றாலும், அதன் பாவம், யார் அதனால் சாப்பிட்ரானோ, அப்பாவம் தின்றவனுக்கும் பொய் சேரும்.
7.ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம்
உண்மையான பழமொழி:
ஆயிரம் பேர் இடம் போய் சொல்லி ஆது ஒரு திருமணம் செய்
பொருள்:
பொய் சொல்வதற்கு நம் முன்னோர்கள் எப்பொழுதும் அறிவுறுத்த மாட்டார்கள். ஆயிரம் பேர் இடம் சென்று அவர்களை அழைத்து வந்து ஆசீர்வாதம் வாங்கி ஆவது ஒரு திருமநத்தை செய் என்கின்றனர்.
8.ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்
உண்மையான பழமொழி:
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்
பொருள்:
இந்த பழமொழியை கேட்டால், ஐந்து பெண்களை பெற்றவன் ஆண்டி ஆவான் என்று கூறுவார். ஆனால் உண்மை யாதெனில், ஐந்து பெண்கள் அல்ல அது ஐந்து ரத்த பந்தங்களை குறிக்கும்.
1. ஆடம்பரமாய் வாழக்கூடிய தாய்
2. பொறுப்பில்லா தந்தை
3. துரோகம் செய்யும் சகோதரன்
4. ஒழுக்கமில்லா மனைவி
5. சொல் கேளா பிள்ளை
இந்த ஐந்து ரத்த பந்தங்களை கொண்ட ஒருவன் ஆண்டி ஆவான் என்பதே உண்மையான பொருள்.
9.ஆமை புகுந்த வீடு விளங்காது
பொருள்:
ஆமைக்கு இயற்கையாக திசை காட்டும் சக்தி உள்ளது. கடலில் செல்பவர்கள் ஆமையை வைத்து சரியான திசையை கண்டறிந்து செல்வார்கள். அதனால் கடலில் செல்பவர்கள் ஆமையை வீட்டில் வளர்ப்பார்கள். கடலுக்கு செல்பவர்களின் வாழ்க்கைக்கு உத்திரவாதம் இல்லை என்பதால் இவர்களுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள், ஆமை உள்ள வீடு வேண்டாம் என்று சொல்வார்கள். இதுவே ஆமை புகுந்த வீடு விளங்காது என்று ஆயிற்று.
10.உச்சி வெயிலில் கிணற்றை எட்டி பார்க்க கூடாது
பொருள்:
கிணற்றுக்குள் பல்வேறு விஷவாயுக்கள் உற்பத்தி ஆகும். உச்சி வெயில் நேரத்தில் சூரிய ஒளி நேரடியாக கிணற்றுக்குள் விழுவதால் அந்த வாயுக்கள் லேசாகி மேலே பரவும். அவை எட்டி பார்ப்பவர்களை தாக்கக்கூடம்.
11. இருட்டிய பிறகு குப்பையை வெளியே கொட்டினால், லட்சுமி வெளியே பொய் விடுவாள்.
பொருள்:
பகலில் வீட்டினுள் நடமாடும் நாம் எதாவது சிறிய நகைகளை தவற விட்டிருப்போம். அவை குப்பைக்குள் பொய் சேர்ந்து இருக்கும். இரவு நேரத்தில் குப்பையை வெளியே கொட்டிவிட்டால் பின் அதை தேடுவது சிரமம் ஆகி விடும். அதனாலேயே இப்பழமொழி.
12.வீட்டிற்குள் புறா வளர்க்க கூடாது. வளர்த்தால் குடும்பம் அழிந்து விடும்.
பொருள்:
புறாவின் கழிவுகளின் வாசனை பாம்புகளை ஈர்க்க வல்லது. அதனால் விஷப்பாம்புகள் வரக்கூடும்.
13.இரவு நேரத்தில் கீரை சாப்பிட்டால், எமனுக்கு அழைப்பு வைப்பது போல.
பொருள்:
கீரை எளிதில் ஜீரணம் ஆக கூடியது அல்ல. அதனால் இரவில் அதை சாப்பிட்டு படுத்தல் உடல் தொந்தரவுக்கு வழி வகுக்கும்.
14.புளிய மரத்துக்கு கீழே உறங்கினால் பேய் அடிக்கும்.
பொருள்:
புளிய மரம் இரவில் அதிக CO2 வாயுவை வெளியிடும். O2 ஐ உட்கொள்ளும் நாம் புளிய மரத்திற்கு கீழே உறங்கினால் மூச்சுத் திணறல் ஏற்படும். அதையே பேய் என்கிறார்கள்.
15. புண் பட்ட நெஞ்சை புகை விட்டு ஆற்று.
பொருள்:
நம் மனது எதோ ஒரு காரியத்தில் புண்பட்டு விட்டால், வேறு ஏதாது ஒரு காரியத்தில் நம் மனதை புகவிட்டு அதை ஆற்ற வேண்டும் என்பதே பழமொழி. நம் தமிழ் மொழி எப்பொழுதும் தீய காரியங்களுக்கு வழி வகுக்காது.
16.களவும் கற்று மற
உண்மையான பழமொழி:
களவும் கத்து மற
பொருள்:
களவு என்றால் திருடுவது என்பது பொருள். கத்து என்பதற்கு பொய் சொல்லுவது என்னும் வேறு பொருளும் உண்டு. ஆகவே திருடுவதையும் பொய் சொல்வதையும் மற எனவே இப்பழமொழி கூறுகிறது.
17.பாத்திரம் அறிந்து பிச்சை எடு, கோத்திரம் அறிந்து பெண்ணை குடு.
பொருள்:
முன்னோர் காலத்தில் புலவர்கள் பாட்டு பாடி பரிசு பெறுவது வழக்கம். அப்போது, புலவர்கள் பாடும் திறமையை அறிந்து பிச்சை இட வேண்டும் என அரசர்களுக்கும், கோ திறன் அறிந்து பெண்ணை கொடு என்றால், கோ என்றல் அரசன், அரசனுடைய திறமையை அறிந்து பெண்ணை கொடுக்க வேண்டும் என்றும் இப்பழமொழி கூறுகிறது.
18.யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்
பொருள்:
யானை = ஆ+நெய் = பசு நெய்
பூனை = பூ + நெய் = தேன்
அதாவது பசுவின் நெய்யை அதிகமாக உட்கொண்டு உடல் கொழுத்தால், பூவின் நெய்யான தேனை மருந்தாக உட்கொள்ள வேண்டிய காலம் வந்தே தீரும்.
19.ஊரான் வீடு பிள்ளையை தான் வளர்த்தல், தன் பிள்ளை தானே வளரும்
பொருள்:
ஒரு வீட்டுக்கு வந்த மருமகளை ஊரன் வீட்டு பிள்ளையை குறிக்கும். அந்த மருமகளை அவ்வீட்டு மாமியார் ஊட்டி வளர்த்தால், தன் மகனை அந்த மருமகள் நன்றாக பார்த்து கொள்ளுவாள் என்பது பொருள்.
மற்றோரு பொருள் :
ஒருவன் தான் கட்டி கொண்ட மனைவி ஊரன் வீட்டு பிள்ளை ஆவாள். அவளை தன் கர்ப காலத்தில் கணவன் நன்றாக பார்த்து கொண்டால், அவள் வயிற்றில் வளரும் குழந்தையை (தன் பிள்ளை) நன்றாக பார்த்துக் கொள்ளுவாள்.
20.கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே
பழமொழி:
கப்பலே கவிழ்ந்தாலும் கன்னக்கோல் வைக்காதே
பொருள்:
கன்னக்கோல் - முற்காலத்தில் திருடர்கள் பிற வேடம் இட்டு வீட்டிற்குள் வந்து பின்னர் திருடுவதற்கு ஏதுவாக வீட்டின் வெளி சுவற்றில் குறியிட்டு செல்வார்கள். அந்த குறியிடுதலை கன்னக்கோல் என்பர்.
முற்காலத்தில் செல்வந்தர்கள் எல்லாம் கடற்கடந்து கப்பலில் பயணம் செய்து செல்வத்தை ஈட்டுவர். அப்படி சேர்த்த செல்வம் கப்பல் கவிழ்ந்து போனாலும் திருடும் தொழிலுக்கு செல்ல கூடாது.
சேர்த்து வைத்த செல்வம் எல்லாம் வீணாய் போனாலும் நாம் திருடக்கூடாது என்பதே இந்த பழமொழியின் அர்த்தமாகும்.
21.கொட்டு பட்டாலும் மோதிர கையால் கொட்டு படனும்
பழமொழி:
மோதுகிற கையால் குட்டு படு
பொருள்:
குட்டு படுதல் என்றால் தோல்வி உறுதல்
உனக்கு சமமாக நின்று மோதக்கூடிய கையால் தோல்வி உற்றாலும் அது உனக்கு இழுக்கில்லை.
22.வெட்டை வந்தால் கட்டை
வெட்டை என்பது gonorrhea என்ற நோயை குறிக்கும்
கட்டை என்பது சந்தானகட்டையை குறிக்கும்
வெட்டை நோய் ஆண் பெண், இருபாலாருக்கும் வரக்கூடிய நோய். வெட்டை நோய் முத்தி போனால் பாடையில் போக வேண்டியதுதான் என்பது பொருள் அல்ல. அந்நோய்யால் அவதி படுபவர் இந்த சந்தன எண்ணெய் வைத்து நம் உடம்பில் உள்ள உஷ்னத்தை குறைத்து கொள்ளலாம் என்பதே பொருள்.
23.ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி
பொருள்:
ஆலமரமும் வேலமரமும் கொண்ட பல்குச்சியை தொடர்ந்த பயன்படுத்தி வந்தோம் என்றால், நமது பல் மற்றும் ஈர் பலமாக இருக்கும், வாய் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.
நாளும் இரண்டும் என்றால் நாலு என்பது நாலடியாரை குறிக்கும். இரண்டு என்பது திருக்குறளை குறிக்கும்.
இவை இரண்டும் படித்து தெரிந்தால் அவர்களின் சொல் பலமாகும், வாழ்வு வளமாகும்.
24.வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
பொருள்:
வல்லவன் என்பது பலமான தேகம் உடையவன் என்ற பொருள் அல்ல. இங்கு வல்லவன் என்பதற்கு ஆரயோக்கியமான உடலை குறிக்கும்.
புல்லும் ஆயுதம் என்றல் புல்லை கொண்டு பொய் சண்டை இடுவது அல்ல. புல் என்றல் அருகம்புல்லை குறிக்கும். அருகம்புல் என்பது பூமியில் முதலில் தோன்றிய புல் எனக் கூறப்படுகிறது.
அகரம்புல் (முதலில் தோன்றியது) என்ற சொல்லே அருகம்புல் என மாறியது. இந்த புல்லை சாறு எடுத்து தினமும் குடித்தால் உடல் வலிமை பெரும், நோய்கள் பறந்து போகும், இரத்தம் சுத்தமாகும், உடலின் உஷ்ணத்தை தணிக்கும். இது போன்ற பல்வேறு நன்மைகள் அருகம்புல்லில் உண்டு.
இதுவே வல்லவனுக்கு (ஆரோக்கியமானவன்) புல்லும் (அருகம்புல்) ஆயுதம் என்பதற்கு அர்த்தம்.
No comments:
Post a Comment