👉 _*கிறிஸ்தவ ஐசுவரியவான்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும்?*_
✍ இவ்வுலகத்திலே ஜசுவரியமுள்ளவர்கள் *இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும்,* நிலையற்ற *ஜசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும்,* நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற *ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்,*
1 தீமோத்.6:17
*நன்மைசெய்யவும்,* *நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்,*
1 தீமோத்.6:18
நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி *வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும்* அவர்களுக்குக் கட்டளையிடு.
1 தீமோத்.6:19
என்று இளம் ஊழியர் தீமோத்தேயுவுக்கு அப். பவுல் தரும் ஆலோசனையை கவனியுங்கள்.
அதன் அடிப்படையில் இவ்வுலகத்தில் ஐசுவரியமுள்ளவர்கள்:
1⃣ இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாய் இருக்கக்கூடாது. (1தீமோத்.6:17)
ஐசுவரியம் இருக்கிற இடத்தில் இறுமாப்பு இருக்க அதிக வாய்ப்பு உண்டு!
ஐசுவரிய இறுமாப்பு
சபையில் முக்கியமான பதவி, விசேஷித்த மரியாதை இவைகளை எதிர்ப்பார்க்கத் தூண்டும்! (யாக்.2:2,3)
இல்லாத ஏழை விசுவாசிகளை அசட்டைப்பண்ணச் சொல்லும்!
(1கொரி 11:21,22)
பொன் மோதிரம், மிணுக்கு வஸ்திரம், விசேஷித்த ஆகாரம் என்று தன் ஐசுவரிய பெருமையை வெளிப்படுத்த ஆவலாய் இருக்கும்!
(யாக்.2:2,3, 1கொரி 11:21)
ஐசுவரியவான்கள் இவ்வித காரியங்களுக்கு விலகித் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.
ஊழியக்காரர்கள், ஐசுவரியவான்களை ஒருவிதமாகவும், ஏழை விசுவாசிகளை ஒருவிதமாகவும் நடத்தக்கூடாது என்று அப் யாக்கோபு கண்டிக்கிறார்.
(யாக் 2:1 - 6)
பசியுள்ள ஏழை விசுவாசிகளின்மேல் கரிசணையற்ற பணக்கார விசுவாசிகள், அவர்களை அசட்டைப்பண்ணுகிறதை அப் பவுல் சகித்துக்கொள்ளமுடியாது என்கிறார்!
(1கொரி 11:20-22)
*ஏழை விசுவாசிகளை பணக்கார விசுவாசிகள் அசட்டைப்பண்ண சபையில் ஊழியர்கள் இடந்தரக்கூடாது!*
😁 ஐசுவரியவான்கள் சபைக்கு வந்துவிட்டால் சில ஊழியக்காரர்கள் அவர்களுக்கு எடுபிடிகளாக மாறிவிடுகிறது அருவருப்பாயிருக்கிறது!
2⃣ நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வைக்கக்கூடாது. (1தீமோத்.6:17)
😊 அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: *ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.*
லூக்கா 12:16
அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் *சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே,*
லூக்கா 12:17
நான் ஒன்று செய்வேன், *என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி,* எனக்கு விளைந்த தானியத்தையம் என் பொருள்களையும் *அங்கே சேர்த்துவைத்து,*
லூக்கா 12:18
பின்பு: ஆத்துமாவே, *உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது,* நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.
லூக்கா 12:19
தேவனோ அவனை நோக்கி: *மதிகேடனே,* உன் ஆத்துமா(நீ) உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது *நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்* என்றார்.
லூக்கா 12:20
*தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன்* இப்படியே இருக்கிறான் என்றார்.
லூக்கா 12:21
அதிகம் சேர்த்துவைத்துவிட்டால் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிடலாம் என்று இங்கு ஒருவன் நம்புகிறான்!
அநேக வருஷங்களுக்கு அநேக பொருட்கள் சேர்த்துவைத்துவிட்டால், பாதுகாப்பாக இருந்துவிடலாம் என்று இவன் நம்புகிறான்.
பூமிக்குரிய ஐசுவரியத்தை்கொண்டு ஒருவனும் தன்னை திருப்திப்படுத்திவிட முடியாது!
*கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது;* நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்.
நீதி.11:4
என்கிறார் ஐசுவரியவான் சாலொமோன்.
😊 *ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்.* ஏனெனில் *அவன் புல்லின் பூவைப்போல்* ஒழிந்துபோவான்.
யாக்.1:10
சூரியன் கடும் வெய்யிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவு அழிந்துபோம். *ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான்.*
யாக்.1:11
என்கிறார் அப் யாக்கோபு.
கொடுமையை நம்பாதிருங்கள், கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள், *ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள்.*
சங்கீதம் 62:10
என்கிறார் ஐசுவரியவான் தாவீது.
3⃣ ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவேண்டும். (1தீமோத்.6:17)
நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிறவர் அவரே!
கொடுக்கப்பட்டவைகள்மேல் அல்ல, கொடுத்தவர்மேலேயே நம்பிக்கை வைக்கவேண்டும்.
ஐசுவரியம் நிலையற்றது. அது அழியும், ஆனால் அதைக் கொடுக்கிறவர் என்றைக்கும் மாறாதவர்!
(யாத்.3:14, எபிரே.13:8)
அவர்மேல் நம்பிக்கைவைத்தால் திரும்ப ஐசுவரியத்தை சம்பாதிக்கிறதற்கான பெலனை கொடுப்பார்.
(உபாக.8:18)
சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள், *நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.*
சங்கீதம் 20:7
அவர்கள் முறிந்து விழுந்தார்கள், *நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்.*
சங்கீதம் 20:8
என்று தேவனை நம்புவோர் கெம்பீரிக்கலாம்!
4⃣ நன்மைசெய்யவேண்டும். (1தீமோ 6:18)
செல்வத்தில் ஐசுவரியவான்களாய் இருக்கிறவர்கள், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவேண்டும்!
*தாராளமாய்க்* கொடுக்கிறவர்களும், *உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்* வேண்டும்.
*ஒரு கிறிஸ்தவ ஐசுவரியவானின் செல்வம் அவனுக்கு மட்டுமே உரியது அல்ல!*
அதில் *ஊழியருக்கும்* (கலாத்.6:6), *சக விசுவாசிகளுக்கும்* (6:10), *அந்நியருக்கும்* (ரோமர்12:13), *சத்துருக்களுக்கும்*
(12:20), *விதவைகள்* மற்றும் *திக்கற்றப் பிற்ளைகளுக்கும்* (யாக்.1:27), *பிச்சைக்காரருக்கும்* (லூக்கா12:33) பங்குண்டு!
😊 விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் *ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள்.* ஒருவனாகிலும் *தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை,* சகலமும் அவர்களுக்குப் *பொதுவாயிருந்தது.*
அப் 4:32
நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, *விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து,*
அப் 4:34
அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். *அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது.* அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.
அப் 4:35
ஆதிசபையில் இருக்கிறவர்கள், இல்லாதவர்களின் தேவைக்குத்தக்கதாக கொடுத்து, பொருளாதாரத்தில் ஒரு சமநிலையை உண்டாக்கினார்கள்!
*செழிப்பின் உபதேசிகள்: இருக்கிறவர்கள் இல்லாதோர்க்குக் கொடுக்க போதியாமல், தங்களை ஐசுவரியவான்களாக்க நேரடியாக தேவனிடம் கேட்கும்படி போதிக்கிறார்கள்!*
*"தங்கள் ஐசுவரியம் தாங்கள் அநுபவிக்க மட்டுமே"* என்கிறவர்கள் *பரலோக ஐசுவரியத்தை இழந்துப்போவார்கள்!* (லூக்கா12:15-21, 16:19,23-25)
தாராளமாய்க் கொடுப்பதில் ஐசுவரியமுள்ள கிறிஸ்தவரே உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவேண்டும்!
5⃣ வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக சேர்த்துவைக்கவேண்டும். (1தீமோத்.6:19)
*வருங்காலம் நமக்கு பரலோகத்தில்தான்!*
*நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது,* அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
பிலி 3:20
*நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை.* வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம்.
எபிரே 13:14
நிலையான பரம எருசலேம் நகரில் குடிப்போக விரும்புவோர், அங்கே தங்களுக்கு பொக்கிஷங்களைச் சேர்க்கவேண்டும்.
உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப்பிச்சைகொடுங்கள், *பழமையாய்ப்போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள்,* அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை.
லூக்கா 12:33
*நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி,* அநீதியான *உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.*
லூக்கா 16:9
என்று ஆலோசனைச் சொல்லுகிறார் கிறிஸ்து இயேசு.
"நித்திய ஜீவனை அடைகிறதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும்" (மத்.19:16) என்று கேட்ட ஐசுவரியவானிடம்:
நீ போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, *அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்,* பின்பு என்னைப் பின்பற்றிவா
மத்தேயு 19:21
என்று சொன்னார் நம் கர்த்தர் இயேசு.
*பரலோகம் போக விரும்புவோர், அங்கே தங்களுக்கு பொக்கிஷங்களைச் சேர்க்கவேண்டும்!*
நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி பரலோகத்தில் பொக்கிஷம் சேர்க்க விரும்புவோர், தங்கள் பூமியின் பொக்கிஷங்களை ஏழைகளுக்காய் கரைக்கவேண்டும்.
6⃣ பரலோக பொக்கிஷங்களுக்காய் பூமியின் பொக்கிஷங்களைத் துறக்க ஆயத்தமாயிருக்கவேண்டும்.
அதற்கு கர்த்தர் இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், *உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்,* பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
மத்தேயு 19:21
*அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது,* துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்.
மத்தேயு 19:22
பரலோகத்திற்காய் பூமியை இழக்க அவனுக்கு மனதில்லை!
அப்பொழுது, கர்த்தர் இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: *ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று,* மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 19:23
மேலும் *ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும்,* ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மத்தேயு 19:24
*பரலோக பொக்கிஷத்தைவிட பூமியின் பொக்கிஷங்களை பெரிதாய் எண்ணுகிறவன், பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க வாய்ப்பில்லை!*
பூமியிலே தனக்கு எவ்வளவோ சேர்த்திருந்தும், *பரலோகத்தில் ஒரு சொட்டுத் தண்ணீர்க்கூட* சேர்த்துவைக்காத ஒரு பரிதாபமான ஐசுவரியவானைப் கர்த்தர் சொன்ன உவமையில் பார்க்கமுடிகிறது! (லூக்கா16:24)
பரலோகத்தில் பெற்றுக்கொள்ள விரும்புவோர், பூமியில் தேவசித்தமானால் விட்டுவிட ஆயத்தமாய் இருக்கவேண்டும்!
*நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும்,* நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய்த் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, *கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்,*
பிலி 3:9
இப்படி நான் அவரையும் *அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும்,* அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், *அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடேழுந்திருப்பதற்குத் தகுதியாயிருக்கும்படிக்கும்,*
பிலி 3:10
*அவருக்காக எல்லாவற்றையும்* நஷ்டமென்று *விட்டேன்.* குப்பையுமாக *எண்ணுகிறேன்.*
பிலிப்.3:11
என்கிறார் அப் பவுல்.
விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது *பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து,*
எபி 11:24
*அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும்* தேவனுடைய ஜனங்களோடேதுன்பத்தை அநுபவிப்பதையே *தெரிந்துகொண்டு,*
எபி 11:25
*இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து,* *எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும்* கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்.
எபி 11:26
*விசுவாசத்தினாலே அவன்* அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல *உறுதியாயிருந்து,* ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் *எகிப்தைவிட்டுப் போனான்.*
எபி 11:27
பூமியை விட்டுவிட மனமில்லாதவன் பரலோகத்தைப் பற்றிக்கொள்ள முடியாது!!
_எழும்பி பிரகாசி_ 🔥
No comments:
Post a Comment