*நீர் என்னைக் காண்கின்ற தேவன் (ஆதி 16-13)*
யோசேப்பின் மேல் கைபோட்டு அவனை பலவந்தம் செய்த போத்திப்பாரின் மனைவி வீட்டில் நடந்த சம்பவம் உங்களில் பலருக்கும் தெரியாது. முகமதியர்களின் குரானில் இந்த காரியம் எழுதபட்டிருப்பதாக கூறுகிறார்கள். குறிப்பிட்ட அந்த நாளில் போத்திபாரின் மனைவி தனது வீட்டிற்குள் இருந்த கையினால் செய்யப்பட்ட தெய்வங்களை எல்லாம் துணியினால் மூடினாளாம். அதை பார்த்த யோசேப்பு அதற்கான காரணத்தை போத்திபார் மனைவி இடம் கேட்டபோது "அவள் அந்த நாளில் ஒரு பெரிய பாவம் செய்யப் போவதாகவும், அந்த பாவ செயலை தனது வணக்கத்திற்குரிய தெய்வங்கள் பார்க்ககூடாதென்றும் அதின் காரணமாகவே அந்த தெய்வங்களின் கண்கள் துணியினால் மறைக்கப்படுகிறதென்றும் விடை பகர்ந்தாள்". அதை கேட்ட யோசேப்பு "நீ வழிபடும் கடவுள்களை உனது பாவ செய்கைகளை காணவொட்டாமல் அவைகளின் கண்களை துணிகளால் மூடி மறைத்து போடலாம். ஆனால் நான் ஆராதிக்கும் என் தேவன் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர். பூமி எங்கும் உலாவி நோக்கும் அந்த சர்வ வல்லவரின் கண்களை (2 நாளா 16-9) எந்த ஒரு மனிதனாலும் மூடி மறைக்க இயலாது" என்று சொன்னான்.
தான் ஆராதிக்கும் கர்த்தரின் வல்லமையையும், மகிமையையும், பரிசுத்தத்தையும் நன்கு அறிந்து கொண்டிருந்த யோசேப்பு மிக எளிதாக தனக்கு நேரிட்ட பாவ சோதனையிலிருந்து தன்னை காத்து கொள்ள முடிந்தது.
மனிதர் பாவத்தில் வீழ்ச்சியடைவதன் முக்கியமான காரணங்களில் ஒன்று அவர்கள் தங்கள் ஆண்டவரை அறியாதிருப்பது ஆகும். ஒரு கிறிஸ்தவன் தன்னை ஆட்கொண்ட கர்த்தர் எப்படிபட்ட பரிசுத்தர், எப்படியான சர்வ வல்ல தேவன் என்று அறிந்து கொண்டால் அவன் ஒருபோதும் பாவம் செய்யவே இயலாது.
இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் - 2 பேதுரு 2:20
இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவில் வளருங்கள் (2 பேது 3-18)
உனது ஆண்டவருடைய கண்களுக்கு மறைவாக நீ எதையும் செய்ய இயலாது. அவர் உன்னை எப்பொழுதும் சூழ்ந்து இருக்கிறார் (சங் 139-3)
No comments:
Post a Comment