நினைப்பாயாக*
*உபாகமம் 32:7*
பூர்வ நாட்களை நினை, தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற வருஷங்களைச் கவனித்துப்பார், உன் தகப்பனைக் கேள், அவன் உனக்கு அறிவிப்பான், உன் மூப்பர்களைக் கேள், அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள்ஃ
*1. எப்படிப்பட்ட இடத்தில் புறப்படப் பண்ணினார் என்பதை நினைவுக்கூறு*
======================
*உபாகமம் 5:15*
நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக, ஆகையால் ஓய்வுநாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார்.
*2.நடத்தி வந்த எல்லா வழிகளை நினைப்பாயாக*
=======================
*உபாகமம் 8:2*
உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக.
*3. பெலன் கொடுத்ததை நினைப்பாயாக*
======================
*உபாகமம் 8:18*
உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக, அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்.
*4. தேவன் கற்பித்த வார்த்தையை நினைப்பாயாக*
======================
*யோசுவா 1:13*
கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் இளைப்பாறப்பண்ணி, இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுத்தாரே.
======================
No comments:
Post a Comment