*ஹெலன் கெல்லர்*
செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்(பிரசங்கி 9:10)
.
ஹெலன் கெல்லர் என்பவரை குறித்து பிள்ளைகளின் பாட புத்தகங்களிலும் எழுதப்பட்டிருக்கிறது. அவர் பத்தொன்பது மாதக் குழந்தையாக இருந்தபோது திடகாத்திரமான, மகிழ்ச்சியானக் குழந்தையாக இருந்தாள். திடீரென ஒருநாள் ஏற்பட்ட கடுமையான காய்ச்சலால் கண் முற்றிலும் தெரியாமல் போய்விட்டது. காதும் சுத்தமாக கேட்கவில்லை. இரண்டு முக்கியமான உணர்ச்சிகளை சிறுவயதிலேயே இழந்து விட்டாள். தாயாரின் உடையின் ஓரத்தைபிடித்துக் கொண்டே அங்கும் இங்கும் அலைவாள்.
.
மற்றவர்களின் கரங்களை பிடித்துப்பார்த்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முயல்வாள். அப்படி அநேக கரியங்களை செய்யக் கற்றுக் கொண்டாள். மாட்டிலிருந்து நன்றாக பால் கறப்பாள். ரொட்டி மாவை நன்றாக பிசைவாள். மக்களின் ஆடையைத் தொட்டுப் பார்த்தோ முகத்தை தடவிப் பார்த்தோ யார் என்று கண்டுபிடித்து விடுவாள்.
.
அவள் தன் கைகளினால் சைகைகாட்டி குடும்பத்தாருக்கு அவளுடைய மனதை வெளிப்படுத்த கற்றுக் கொண்டாள். சுமார் அறுபது வகையான சைகைகள் அவளுக்கு தெரிந்திருந்தது. அவளுக்கு ரொட்டி வேண்டுமெனறால் ரொட்டியை அறுப்பது போன்ற சைகை காட்டுவாள்.
.
மிகவும் அறிவாளியாக இருந்த ஹெலன் பெரியவளானபோது நன்குப் பேச முடியாமல் போனது பெரிய கோபத்தை எழுப்பியது. எனவே அவளுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்த குடும்பத்தினர் ஆனி கல்லிவான் என்ற ஒரு ஆசிரியையை நியமித்தனர். கல்லிவானும் கண்பார்வையற்றவாராக இருந்து அறுவை சிகிச்சை மூலம் பார்வையடைந்தவர். எனவே கண்தெரியா ஹெலனின் மனதை நன்கு புரிந்துக் கொணடார். ஆங்கில வார்த்தைகளை ஒவ்வொரு எழுத்தாக ஹெலனின் கையில் எழுத்pக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.
.
குழாயின் மூலமாக தண்ணீரை அவருடைய கையில் பீச்சி, ஆங்கில எழுத்துக்களை எழுதி காண்பிப்பார். பார்வையற்றவர்கள் மொழியான பிரெய்லியையும் கற்றுக் கொண்ட ஹெலன் ஆனி கல்லியன் உதவியுடன் கல்லூரி பட்டப்படிப்பையும் முடித்தார். கல்லூரியில் படிக்கும்போதே என்னுடைய வாழக்கைக் கதை என்ற புத்தகத்தை எழுதி அதில் கிடைத்த பணத்தை வைத்து வீடு ஒனறு வாங்கினார். பின்னர் உலகப்புகழ் பெற்ற எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் திகழ்ந்தார். மாற்றுத் திறனாளிகளும் கடின உழைப்பினால் வெற்றி பெற முடியும் என்று நிரூபித்தார்.
.
அவருடைய இந்த விடாப்பிடி முயற்சியை பிள்ளைகளுக்கு சொல்லி, அவர்களும் தங்களுக்கு இருக்கிற தாலந்துகளை பயன்படுத்தி, முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தோடு பாட புத்தகத்தில் அவருடைய கதையை எழுதியிருக்கிறார்கள்.
.
நல்ல உடல் நிலையோடு முழு பெலத்தோடு இருக்கிற நாம் கர்த்தருக்காக எதையாவது செய்கிறோமா? கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கிற நல்ல உடல் உறுப்புகளுக்காக கர்த்தருக்கு நன்றி சொல்கிறோமா? செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய் என்ற வார்த்தையின்படி நமக்கிருக்கும் பெலத்தோடே கர்த்தருக்காக நம்மால் இயன்றதை செய்வோம். கர்த்தர் அதில் மகிமைப்படுவார். ஆமென் அல்லேலூயா!
.
குறைவுள்ளோனானாலும் கூடவே இருக்கிறீர்
நிறைவாம் புல் தரையில் மெதுவாக நடத்துகிறீர்
இறைவனாம் இயேசு
எல்லாவற்றிலும் திருப்தியாக்குகிறீர்
.
ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியது
ஆகாயம் பூமி மலை ஆழிகளுக்கெல்லாம் பெரியது
.
ஜெபம்: எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, ஹெலன் கெல்லர் தன்னுடைய இயலாத நிலையிலும் விடாப்பிடி முயற்சியோடு சிறந்த எழுத்தாளராக விளங்கினதைப் போல அநேக கிறிஸ்தவ ஊழியர்கள் தங்கள் உடல் உறுப்பின் குறைபாடுகளிலும் கர்த்தருக்காக சாதிக்கிறதை நாங்கள் பார்க்கிறோமே அப்படிப்பட்ட ஊழியர்களுக்காக நன்றி செலுத்துகிறோம் ஐயா. எங்களுக்கு நீர் கொடுத்த நல்ல உடல் உறுப்புகளுக்காக நன்றி ஐயா. நாங்கள் எங்களால் இயன்றதை கர்த்தருக்காக செய்ய உதவி செய்தருளும். இயேசுகிறிஸ்துவின் ஜீவனுள்ள நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.
No comments:
Post a Comment