இயற்கைக்கப்பாற்பட்ட அறிவு
*"விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்" (எபி.11:3)*
"விசுவாசத்தினாலே நாம் அறிந்திருக்கிறோம்". உங்களில் விசுவாசம் இல்லையெனில், உங்களுக்கு சரியான அறிவு இல்லை என்பதே அதன் பொருளாகும். விசுவாசம் இல்லாத பட்சத்தில், ஆவிக்குறிய காரியங்களைக்குறித்து உங்களுக்கிருக்கும் அறிவெல்லாம் தவறான அறிவாகவே இருக்கும். ஒரு மனுஷன் தனக்கிருக்கும் இயற்கையான மூளையின் மூலம் இந்த இயற்கையான உலகத்திலுள்ள, இயற்கையான காரியங்களை விளங்கிக்கொள்ளக் கூடியவனாயிருப்பான். ஆனால் இயற்கைக்கப்பாற்பட்ட, மேலுலகிலுள்ளவைகளை விளங்கிக் கொள்வதற்கு, பரிசுத்த ஆவியினால் செயல்படுத்தப்படும் *'விசுவாசம்' என்று அழைக்கப்படும் இயற்கைக்கப்பாற்பட்ட அறிவு ஒருவருக்கு அவசியம்.* மனித மூளை ஒரு வரம்பிற்கு உட்பட்டதாதலால், மனித அறிவும் ஓர் எல்லைக்குட்பட்டதே. ஆனால் விசுவாசம் நம் உள்ளத்திற்குள் வரும்போது, நம்முடைய அறிவானது சமுத்திரத்தைப் போல அளவில்லாததாக மாறிவிடுகிறது. (1கொரி. 2:11,12) ஆயினும், விசுவாசம் நம்மை விட்டுப் போய்விடுமாயின், நம்முடைய ஆவிக்குரிய அறிவு மரித்துவிடும்.
உலகங்களை உண்டாக்கிய தேவனுடைய வார்த்தை நம்மையுங்கூட உருவாக்கிக்கொண்டிருக்கிறது. *தேவனுடைய வார்த்தை 'விசுவாசத்தின் வார்த்தை' என்று அழைக்கப்படுகிறது. (ரோமர் 10:8)* - அதற்குச் சிருஷ்டிக்கும் வல்லமை உண்டு. 'உண்டாக்குதல்" என்பதற்கான கிரேக்க வார்த்தை 'சரியாகப் பொருந்தும்படி செய்தல்' என்று பொருள்படும். வேறு வார்த்தைகளில் கூறின், தேவனுடைய வார்த்தையில் ஒரு மனுஷன் கொண்டிருக்கும் விசுவாசமானது, அவனைச் சரீரப்பிரகாரமாகவும், ஆவிக்குரிய பிரகாரமாகவும், எழுச்சிகள் சம்பந்தமாகவும் சரியாகப் பொருந்தக் கூடியவனாக, அதாவது சரியான தகுதியுள்ளவனாக மாற்றுகிறது. *'அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே இவனைப் பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசமே இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது' (அப்.3:16)*
*ஒரு மனிதன் தனக்கு தேவையான ஆரோக்கியம், சுகம், பணம் போன்ற பூமிக்குரிய தேவைகளுக்காக தேவன் மேல் நம்பிக்கை வைக்கக்கூடாதவனாயிருப்பானென்றால், அவர் தன்னுடைய ஆவிக்குரிய தேவைகளைச் சந்திப்பார் என்பதை எவ்வாறு அவனால் விசுவாசிக்கக் கூடும்?*
No comments:
Post a Comment