*வேதத்தை படிக்க படிக்க உலகத்தை வெறுக்க வேண்டும்*
-------------------------------------------------------------
எல்லாவற்றைப் பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன் (சங்கீதம் 119:128)
பொய் வழி = உலகம்
வேதத்தை படிக்க படிக்க உலகத்தை வெறுக்க வேண்டும். அப்படி வெறுக்கவில்லை நீ வேதம் படிப்பது வீண்.
எபி 11:24,25 ல் அநித்தியமான பாவ சந்தோஷங்களை மோசே வெறுத்தான். காரணம் அவன் விசுவாசத்தில் பெரியவன் ஆனான். தேவ ஜனமே இந்த வெறுப்பு உனக்கு உண்டா ? விசுவாசத்தில், ஆவிக்குரிய ஜீவியத்தில் அநேகர் LKG ல் இருப்பதால்தான் உலகத்தை வெறுக்க முடியவில்லை. விசுவாசத்தில் வளர்ந்தால், பெரியவன் ஆனால்தான் உலகத்தை வெறுக்க முடியும்.
இன்றைக்கு அநேக ஊழியர்கள், விசுவாசிகள் இடம் இந்த வெறுப்பை காண முடியவில்லை. காரணம் வசனம் அவர்களில் கிரியை செய்யவில்லை எல்லோரும் வேதம் படிக்கிறார்கள். அநேக வசனம் மனப்பாடமாக தெரியும். ஏன் ஊழியம்கூட செய்வார்கள். உலகத்தை வெறுக்க மாட்டார்கள். வசனம் கிரியை செய்தால்தான் பிரயோஐனம். இல்லாவிட்டால் பிரயோஐனம் இல்லை. உடலில் மருந்து கிரியை செய்ய செய்ய நோய் குணமாகும். அதுபோல வசனம் கிரியை செய்ய செய்ய உலக வெறுப்பு ஏற்படும்.
1கொரி 7-31 → உலகம் அழிந்து போக்கூடியது.
இன்னும் நான் வெறுக்க வேண்டிய காரியங்கள் என்னென்ன என்று வேதத்தில் தேடி பார்க்க வேண்டும்.
கிறிஸ்தவ ஜீவியத்தின் ஆரம்பம் நம்மை வெறுத்தல் (மத் 16:24,25)
அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.
(மத்தேயு 16:24)
நாம் அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் வெறுத்து
(தீத்து 2:12)
அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். (லூக்கா 14:33)
எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு. எல்லாம் தகுதியாய் இராது. 1 கொரி 6:12
எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு. ஆனால் எல்லாம் பக்தி விருத்தியை உண்டாக்காது. - 1 கொரி 10-23
தேவ பிள்ளையே இடுக்கமான வாசல் வழியாக உட்பிரவேசி (மத் 7-13) பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும் (வெளி 22-11)
No comments:
Post a Comment