In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Sunday, August 29, 2021

Tamil Sermon Outlines | Tamil sermon notes | பிரசங்க குறிப்பு

 



*உங்களில் அவனவன் தன் தன் சரீர பாண்டத்தை பரிசுத்தமாக காத்துக் கொள்ளகடவன் (1 தெச 4:5)*

அநேக ஆண்டுகளுக்கு முன் இராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு சிறு பகுதியை வீரமுள்ள இந்து மன்னன் ஆண்டு வந்தான். ஒரு முகமதிய மன்னன் இவனது நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தான். இந்த இந்து மன்னனுக்கு கற்புள்ள ஒரு அழகான மனைவி இருந்தாள். அந்த அழகிய பெண்ணை தனக்கு மனைவியாக கொள்ளும் நோக்கத்திலே அந்த இச்சை நிறைந்த முகமதிய மன்னன் போர் தொடுத்து இருந்ததான். இந்து மன்னன் முகமதிய அரசனை எதிர்த்து கடும் போர் புரிந்து இறுதியில் போர்க்களத்தில் மடிந்து விட்டான்.


போரில் வெற்றி கிடைத்தவுடன் மகிழ்ச்சியுடன்  முகமதிய மன்னன் அரசியை தேடி சென்றான். அரசி இருக்கக்கூடிய அந்தபுரம், பள்ளியறை எங்கும் தேடியும் அந்த அழுகுள்ள அரசியை கண்டு பிடிக்க இயலவில்லை. அப்படியே அவன் தேடி வரும் சமயத்தில் அரண்மனையின் வெளி முற்றம் ஒன்றில் கோரக்காட்சியை கண்டாள். நடந்தது என்ன தெரியுமா தனது கணவன் போர்க்களத்தில் மடிந்து விட்டான் என்று கேள்விபட்ட உடன், நெருப்பு வார்த்து, அதில் குதித்து பிடிசாம்பலாகி விட்டாள் (உடன்கட்டை ஏறுதல்) அந்த உத்தம பத்தினி. இதைக் கண்ட முகமதிய மன்னன் கண் கலங்கி இனி மரண பரியந்தம் பெண் ஆசை கொள்ள மாட்டேன், எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்க மாட்டேன் என்று தீர்மானம் செய்தான். இது கட்டுக்கதையல்ல, உண்மையாய் நடந்த சம்பவம். இராஜஸ்தானில் இன்று வரை உடன்கட்டை ஏறுதல் ஆங்காங்கு நடந்து வருகிறது.


இந்த நிகழ்ச்சி நமக்கு மாபெரும் சத்தியத்தை சுட்டிக் காட்டுவதை உணர்ந்து கொள்ளலாம்.  உன்னதபாட்டில் கர்த்தருக்கும் நமக்குள்ள உறவை கணவன் மனைவி உறவாகவே நாம் காண்கிறோம். இயேசுவின் இரத்தத்தால் என்று நாம் கழுவபட்டோமோ அன்று நாம் அவருக்கு சொந்தம். கிரயத்துக்கு கொள்ளபட்டீர்களே  ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் ஆவியினாலும் சரிரத்தினாலும் தேவனை மகிமைபடுத்துங்கள் (1 கொரி 6-20)


ஒரு ஆண்டவருடைய பிள்ளை இரயிலில் ஒரு சமயம் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள்.  அவருக்கு அருகில் பிரயாணம் செய்த சிலர் நேரத்தை போக்குவதற்காக சீட்டு விளையாட தொடங்கினார்கள். விளையாட்டுக்கு ஒரு ஆள் குறைந்தபடியால்  மேற்கண்ட ஆண்டவருடைய பிள்ளையை அனுகி அவர்களையும் சீட்டாட்டத்தில் கலந்து கொள்ள அழைத்தனர். அந்த ஆண்டவருடைய பிள்ளை சொன்னது:- "அன்பான நண்பர்களே வருந்துகிறேன், இந்த கரங்கள் எனக்குரியவைகள் அல்ல" என்றாராம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.


நமது சரீரம் தேவனுடைய ஆலயம் என்றும், ஒருவன் தேவனுடைய ஆலயத்தை கெடுத்தால் தேவன் அவனை கெடுப்பார் என்றும், தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது என்று 1 கொரி 3:16,17 ல் வாசிக்கிறோம்.


தேவன் வாசம் பண்ண கூடிய சரித்தை பரிசுத்தமாக பாதுகாத்து கொள்ள வேண்டியது நமது கடமையாகும். புசித்தலிலும், குடித்தலிலும், உடுத்தலிலும், குடும்ப வாழ்விலும் கூட நம்முடைய இஷ்டபடி காரியங்களை செய்து விட முடியாது.


அநேகர் ஆகார காரியங்களில் சரிரத்தை கறை படுத்துகின்றனர். வயிறு முட்ட சாப்பிட்டவன் தேவ சமுகத்தில் முழங்கால் இட்டு ஜெபிக்க முடியாது. பெருந்திண்டியினால் உங்கள் இருதயம் பாரம் அடைய கூடாது (லூக் 21-34).  ஆகாரத்திற்கும் ஆவிக்குரிய ஜீவியத்திற்கும் இணைப்பு உண்டு.


இமயமலை அடிவாரத்தில் உள்ள ஆசிரமத்தில் (இந்து ஆசிரமம்) எழுதபட்ட வார்த்தைகள்:-

(1) ஆகாரமானது உனது உயிரை காத்து கொள்ளும் பொருட்டு நீ எடுக்கும் மருந்தாக இருக்கட்டும்


2) எளிமையான ஆகாரத்தை உட் கொள்


3) உன்னுடைய வயிற்றுக்கு மிதமிஞ்சிப் பழுவேற்றாதே


4) இன்பத்திற்காக ஆகாரம் புசித்தல் பாவம் ஆகும்


உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. 1 தெச 5:23

No comments:

Post a Comment

Post Top Ad