வேதாகம ரகசியங்கள்
*ஆவிக்குரிய வரங்கள்*
_1 கொரிந்தியர் 12 ம் அதிகாரத்தில் 9 ஆவிக்குரிய வரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன . அவை_
1. *ஞானத்தைப் போதிக்கும் வசனம்* ; தேவனுடைய மனதைப்பற்றியும் , குறிக்கோளைப்பற்றியும் தேவனிடமிருந்து ஒரு தெய்வீக வெளிப்பாடு . அப் ; 27 ; 21-25 .
2. *அறிவை உணர்த்தும் வசனம்* ; ஒரு உண்மையைப்பற்றி , நிகழ்ச்சியைப்பற்றி தேவனிடமிருந்து ஒரு தெய்வீக வெளிப்பாடு . அப் ; 9 ; 11-12
3. *விசுவாச வரம்* ; எவ்வித சந்தேகமோ , கேள்விகளோ இல்லாமல் தேவனை நம்புகிறதற்கான தெய்வீக திறன் . 1 கொரி ; 13 ; 2 .
4. *குணமாக்கும் வரங்கள்* ; மனித உதவியோ , மருத்துவ உதவியோ இல்லாமல் நோயை குணமாக்குகிற தெய்வீக திறன் . மாற்கு ; 16 ; 18
5. *அற்புதங்களை செய்யும் சக்தி* ; இயற்கையின் விதிகளுக்கு மாறாக குறிக்கிட்டு , அற்புதங்களை நடத்துகிற தெய்வீக செயல்பாடு . எபிரேயர் ; 2 ; 3-4 .
6. *தீர்க்கதரிசன வரம்* . ஒரு மனிதரால் , தெரிந்த ஒரு மொழியில் பேசப்படுகிற - தேவனால் அருளப்பட்ட தெய்வீக வார்த்தை . அப் ; 11 ; 27 -28 , 1 கொரி ; 14 ; 3 .
7 . *ஆவிகளைப்பகுத்தறியும் வரம்* ; ஆவிகள் இருப்பதைப்பற்றியும் அவற்றின் செயல்பாடுகளைப்பற்றியுமான ஒரு தெய்வீக வெளிப்பாடு . அப் ; 16 ; 16-18 .
8 . *பற்பல பாஷைகளைப்பேசும் வரம்* ; தெரியாத மொழியில் ( பேசுகிறவருக்கு தெரியாத ) பேசப்படுகிற , தேவனால் அருளப்பட்ட ஒரு தெய்வீக வார்த்தை . அப் ; 2 ; 4-11 .
9 . *பாஷைகளை வியாக்யானம் பண்ணும் வரம்* ; அறியாத ஒரு அந்நியபாஷையை , வியாக்யானம் பண்ணுகிற , தேவனால் அருளப்பட்ட தெய்வீக வார்த்தை . 1 கொரி ; 14 ; 13-14 .
_ரோமர் 12 ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரங்கள் ._
1. *தீர்க்கதரிசனம் சொல்லுகிற வரம்* ; ஒரு மனிதரால் , தெரிந்த ஒரு மொழியில் பேசப்படுகிற தேவனால் அருளப்பட்ட தெய்வீக வார்த்தை . அப் ; 11 ; 27 -28 , 1 கொரி ; 14 ; 3 .
2. *ஊழிய வரம்* ; மற்றவர்களுக்கு உதவி செய்தல் . செயல்களால் தொண்டு செய்தல் . 2 திமோ ; 4 ; 11 .
3. *போதிக்கிற வரம்* ; விவரித்தல் , விளக்குதல் , பயிற்சி அளிப்பது . அப் ; 13 ; 1 .
4. *புத்தி சொல்லுகிற வரம் ;* ஊக்குவித்தல் , அறிவுரை சொல்லுதல் , உற்சாகப்படுத்துதல் , ஆறுதல் அல்லது எச்சரிக்கை கொடுத்தல் , வேண்டுதல் , கடிந்து கொள்ளுதல் . அப் ; 13 ; 15 .
5. *பகிர்ந்து கொடுக்கிற வரம்* ; தேவனுக்கு சமர்ப்பிக்கப்பட , மற்றவர்களுக்கு தாராளமாக வழங்கப்பட பரிசுகளை பகிர்ந்தளித்தல் . நீதி ; 22 ; 9 .
6. *முதலாளித்துவ வரம்* ; தலமை , தலமை தாங்குதல் . அப் ; 20 ; 28
7. *இரக்கம்* ; குற்றவாளிக்கு , தவறிழைக்கப்பட்டவருக்கு மனதுருக்கம் காண்பித்தல் . மத் ; 5 ; 7 .
*தேவனுக்கே மகிமையுண்டவதாக ஆமென்*
No comments:
Post a Comment