*வேத வசனங்களை தேவ பிள்ளைகள் பாடலாக பாடி கொண்டு இருக்க வேண்டும் →*
------------------------------------------------------------+
நான் பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின (சங்கீதம் 119-54)
மேற்கண்ட வசனத்தில் தாவீதின் பாடலாக வேத வசனங்கள் இருந்ததை நாம் காணலாம்.
மறுபடியும் பிறந்த ஒரு தேவ பிள்ளைக்கு ஆண்டவர் அருளிய வேத புத்தகம் மாத்திரம்தான் இந்த பாழுலகத்தில் ஆறுதலும், ஆனந்தமுமாகும்.
நீதிமானோ பாடி மகிழுகிறான் (நீதி 29:6)
தேவ ஜனமே இந்த அனுபவம் உனக்கு உண்டா ? இந்த மகிழ்ச்சி உனக்கு உண்டா ?
நான் பாடும்போது என் உதடுகளும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும்.
(சங் 71:23)
பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள் (சங் 100:1)
என் பாட்டினால் கர்த்தரை துதிப்பேன் - (சங் 28:7)
இராக் காலத்தில் அவரை பாடும் பாட்டு என் வாயில் இருக்கிறது (சங் 42:8)
தேவனை துதிக்கும் புது பாட்டை என் வாயிலே கொடுத்தார் (சங் 40:3)
மேற்கண்ட வார்த்தைகள் தாவிது உபத்திரவத்தின் மத்தியில் கூறிய வார்த்தைகள். அவனது மகனே அவனுக்கு எதிராக செயல்பட்டான். உன் வீட்டில் TV, DVD player, Mobile பாடுவதை விட நீ உன் வாயினால் பாடுவதைதான் கர்த்தர் விரும்புகிறார். அதுதான் உனக்கு ஆசிர்வாதம். உலக மனிதன் அழிந்து போகும் சினிமா பாடல்களை எவ்வளவு உற்சாகமாக பாடுகிறான். அதைவிட நாம் அதிகமாக கர்த்தரை பாட வேண்டும்.
எப்பொழுதும் சத்தமாக பாட முடியாது. ஆனால் நமது இருதயம் எப்பொழுதும் கர்த்தரை பாடி கொண்டு இருக்க வேண்டும். (இருதயத்தில் கர்த்தரை பக்தியுடன் பாடி - கொ 3:16). கர்த்தரை பாடுவது நமக்கு பெலன் (சங் 81:1)
பவுலும் சிலாவும் சிறைசாலையில் ஜெபம் பண்ணி துதித்து பாடினார்கள் - சிறைசாலை கதவு திறந்தது (அப்போ 16:25)
யோசபாத் ராஜாவுக்கு விரோதமாக ராஜாக்கள் ஒன்று கூடி போரிட வந்தார்கள். யோசபாத் பாடகரை போர் விரர்களுக்கு முன் நிறுத்தி பாடவும் துதிக்கவும் செய்தான். விளைவு எதிரிகள் தங்களுக்குள் வெட்டுண்டு விழுந்தார்கள் (2 நாளா 20:22)
தினமும் குறைந்தது 2 பாடல் பாட வேண்டும். குடும்ப ஜெபங்களில் கண்டிப்பாக பாடல் இடம் பெற வேண்டும். உங்கள் பிள்ளைகளை பாடல் பாட உற்சாகபடுத்துங்கள். ஆமென்.
*Children of God should sing the scriptures as a song*
--------------------------------------------
In the house of my sojournings thy statutes have become my psalms (Psalm 119-54).
In the above verse we can see that there were scriptures as the song of David.
The only consolation and joy in this wasteland is the scripture that the Lord has given to a child of God who is born again.
But the righteous rejoice (Proverbs 29: 6).
God people do you have this experience? Do you have this happiness?
When I sing, my lips rejoice, and my soul that is redeemed with water.
(Psalm 71:23)
Sing unto the LORD, all ye inhabitants of the earth (Psalm 100: 1).
I will praise the Lord with my song - (Psalm 28: 7)
The song of his singing in Iraq is in my mouth (Psalm 42: 8)
He put in my mouth a new song of praise to God (Psalm 40: 3).
The above are the words that David uttered in the midst of the tribulation. His son acted against him. The Lord wants you to sing with your mouth rather than singing TV, DVD player, mobile in your home. That is the blessing you have. How enthusiastically the world man sings perishable cinematic songs. We should sing to the Lord more than that.
Can't always sing out loud. But our heart must always be singing to the Lord. (Sing to the Lord with all your heart - Colossians 3:16). Singing to the Lord is good for us (Psalm 81: 1)
Paul and Silas prayed and sang in prison - the prison door opened (Acts 16:25)
The kings came together to fight against King Jehoshaphat. Jehoshaphat made the singer stand before the warriors and sing praises. The result was that the enemies cut themselves apart (2 Chronicles 20:22)
Sing at least 2 songs daily. Singing should definitely be included in family prayers. Encourage your children to sing. Amen.
No comments:
Post a Comment